பயணி ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு. ரயில்வே போலீசார் விசாரணை.

பயணி ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு. ரயில்வே போலீசார் விசாரணை.
X

ரயில் மீது கல்வீச்சு சம்பவம் குறித்து மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே காவல்துறையினர் 

வாணியம்பாடி அருகே பயணி ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசியது குறித்து ரயில்வே போலீசார்  மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்துகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தண்டவாளத்தில் இருந்து நேற்று சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக சென்றுகொண்டிருந்த இண்டர் சிட்டி விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் எறிந்துள்ளனர்.

இதில் விரைவு ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள 3 கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்ததால், ரயில் இஞ்சின் ஓட்டுனர் ஜோலார்பேட்டை இரயில்வே காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான ரயில்வே போலீஸார் சார்லி என்ற மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்

மேலும் தண்டவாளத்தின் அருகே வசிக்கும் பொது மக்களை அழைத்து தண்டவாளத்தை கடக்க கூடாது, ஆடு மாடுகள் மேய்க்க கூடாது, தண்டவாளம் அருகே ஜே.சி.பி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பணி மேற்கொள்ள கூடாது, சந்தேகமான நபர்கள் யாராவது தண்டவாளம் அருகில் தென்பட்டால் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் அளிக்கவும், குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே கடந்த மாதம் இதே பகுதியில் சரக்கு ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் பயணி ரயில் மீது கல்வீசி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!