வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தேங்கியுள்ள குப்பைகள்: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தேங்கியுள்ள குப்பைகள்:  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
X

வாணியம்பாடி ரயில்நிலைய வாயிலில் தேங்கியுள்ள குப்பை

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே குப்பைகள் தேங்கி உள்ளதால் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து மாலை நேரங்களில் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுவதாக ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக வாணியம்பாடி நகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டுமென பொது மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!