பாலாற்றில் சாய்ந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பாலாற்றில் சாய்ந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
X

பாலாற்றில் சாய்ந்துள்ள மின் கம்பங்கள்

வாணியம்பாடி அருகே பாலாற்றில் சாய்ந்து உள்ள மின் கம்பங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடர் மழை காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திம்மாம்பேட்டையிலிருந்து வாணியம்பாடி இப்பகுதிக்கு சப் டிவிஷன் மூலமாக மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடந்த சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் எப்பொழுதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படாது என நினைத்த மின்சார துறையினர் பாலாற்று வழியாக மின்கம்பங்களை அமைத்து மின்சாரத்தை எடுத்துச் சென்றனர்.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வடகிழக்கு பருவமழை யானது தீவிரமடைந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாலாற்று மையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 5 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறையினர் அவ்வழியாக செல்லக்கூடிய கம்பங்களில் மின் இணைப்பை துண்டித்தனர். பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மின்சாரம் கம்பம் சாய்ந்து விழுவதால் அதனை வேறு பகுதியில் இருந்து கொண்டு செல்ல மின்சார துறையினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சாய்ந்து உள்ள மின்கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது