/* */

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம்

ஒப்புதல் சான்றிதழ் கொடுக்க அலைக்கழிப்பதாக கூறி உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம் நடத்தினார்

HIGHLIGHTS

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம்
X

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அஹமத்.இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பிரிவு போட்டுள்ளார். இதற்காக கடந்த 2019ம் ஆண்டு வீட்டுமனை விற்பனை செய்ய உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

பேரூராட்சி செயல் அலுவலர் மனை பிரிவு நிபந்தனை குறித்து தகவல் ஏதும் கொடுக்காமல், விதிகளை வாய்மொழி உத்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஷகீல் அஹமத் வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில் சாலை அமைத்தல், மின்சார கம்பங்களுக்கு மின் வாரியத்தில் பணம் செலுத்தியுள்ளார்.

இன்று செயல் அலுவலரை பார்க்க வந்த போது அவர் அலுவலகத்தில் இல்லாததால் அலுவலக ஊழியரை சந்தித்து போது, அவர் வீட்டு மனை அமைய உள்ள இடத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒப்புதல் கடிதம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

இதனை கேட்ட ஷகீல் அஹமத் கடந்த மூன்று வருடங்களாக ஒப்புதல் சான்றிதழ் கொடுக்க அலைக்கழிப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் பேரூராட்சி அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி