பள்ளி திறந்ததை வரவேற்கும் வகையில் நன்றி என்ற எழுத்து வடிவில் நின்ற மாணவர்கள்

பள்ளி திறந்ததை வரவேற்கும் வகையில் நன்றி என்ற எழுத்து வடிவில் நின்ற மாணவர்கள்
X

நன்றி என்ற எழுத்து வடிவில் நின்ற ஜெய வாசவி பள்ளி மாணவர்கள்

வாணியம்பாடி அருகே பள்ளி திறந்ததை வரவேற்கும் வகையில் தனியார் பள்ளி மாணவர்கள் நன்றி என்ற எழுத்து வடிவில் நின்றனர்

வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி திறந்ததை வரவேற்கும் வகையில் நன்றி என்ற எழுத்து வடிவில் நின்று தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி (ஜெய வாசவி) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9,10,11,12 வகுப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரேனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர். படிப்படியாக கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்ததை அடுத்து தமிழக அரசு செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என அறிவித்தது.


அதனை தொடர்ந்து, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இன்று முதல் பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயவாசவி பள்ளி மாணவர்கள் இன்று பள்ளி மைதானத்தில் 'நன்றி' என்று எழுத்து வடிவில் நின்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெயர்களை கையில் ஏந்தி நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil