மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கே.சி வீரமணி வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில் குமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் முன்னிலை வகித்தார். பேரூர் கழக செயலாளர் சரவணன் அனைவரும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
கடந்த திமுக ஆட்சியில் இருண்ட மாநிலமாக விட்டுச் சென்ற தமிழகத்தை அதிமுக அரசு மிகை மின் மாநிலமாக மாற்றியது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வாக்களித்த மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து முறையான மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ராமு சென்னை உயர் நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் மூலமாக விசாரணை மேற்கொண்டு உரிய நியாயம் கிடைக்கும் .
கடந்த ஆட்சியில் 10 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது 30 லிருந்து 40 ஆயிரம் வரை பாதிப்பு அதிகரித்து உள்ளது. கடந்த ஆட்சியின் போது ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சரும் உயிரை பணயம் வைத்து ஒரு உயிரிழப்பு கூட நிகழக் கூடாது என்ற முக்கியத்துவம் கொடுத்து நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்தோம். தற்போது உள்ளவர்கள் இப்பொழுதுதான் வந்திருக்கின்றார்கள், போகப்போக பார்ப்போம் என கூறினார்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu