வாணியம்பாடி அருகே 500 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்.

வாணியம்பாடி அருகே 500 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்.
X

லாரி டியூபில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ள சாராயம்

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 500 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் கணேசன் தனிபிரிவு பிரகாசம் ஆகியோர் தலைமையில் போலீசார் மேட்டுபாளையம் பகுதியில் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு வீட்டில் பின்புறமாக சென்று பார்த்த போது அங்கே கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் லாரி டியுப்களில் மற்றும் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் கள்ளச்சாராய வியாபாரி பாண்டியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!