வாணியம்பாடி, மாதகடப்பா பகுதியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டை

வாணியம்பாடி, மாதகடப்பா பகுதியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டை
X

 சாராயம் காய்ச்ச 1 டன் வெல்லம் ஏற்றிகொண்டு சென்ற டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு  பயன்படுத்திய வாகனங்கள், வெல்லம்  பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தமிழக ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைந்து அண்ணா நகர்,தேவராஜபுரம், மாதகடப்பா, உள்ளிட்ட பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர், அப்போது சுமார் 1 டன் வெல்லம் ஏற்றிகொண்டு சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

டிராக்டர் பின்னால் 4 இருசக்கர வாகனங்களில் வந்த சாராய வியாபாரிகளை பிடிக்கும் முற்படும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு மலைபகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!