வாணியம்பாடி பகுதியில் தாெடர் கொள்ளை; 8 பேர் கும்பல் சிக்கியது

வாணியம்பாடி பகுதியில் தாெடர் கொள்ளை; 8 பேர் கும்பல் சிக்கியது
X

வாணியம்பாடியில் வீடுகளில் கொள்ளை அடித்தாக கைது செய்யப்பட்ட 8 பேர் கொண்ட கும்பல்.

வாணியம்பாடி பகுதியின் வீடுகளில் தாெடர் கொள்ளை அடித்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்த மாமலைவாசன் மற்றும் இராமநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்த. இவர்களது வீடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளையில் நகை மற்றும் பணம் கொள்ளை போனதாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகரைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். இதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், தும்பேரி கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த 2 இருசக்கர சக்கர வாகனங்கள் வந்த 4 நபர்கள் நிறுத்தி விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே தொடர்ந்து அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அம்பலூர் மற்றும் இராமநாயக்கன் பேட்டையில் வீடுகளில் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது

இதனையடுத்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது28), சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் அபினேஷ் (வயது 19), காமேஷ் (வயது 19) வினோத் குமார் (வயது 19) அரபாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (வயது 24) பசுபதி (வயது 24) முரளி (வயது 26) புத்துகோவில் பகுதியை சேர்ந்த லோகு (வயது 19) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 11 சவரன் தங்க நகைகள், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!