வாணியம்பாடி அருகே 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே  1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X
வாணியம்பாடி அருகே வனப்பகுதியில் ட்ரோன் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கண்டறிந்து 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப்பகுதியான மாதகடப்பா வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வாணியம்பாடி மது அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான போலீசார் மாதகடப்பா மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ட்ரோன் கேமரா மேலே பறப்பதை கண்ட சாராயம் காய்ச்சும் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடனே அங்கு சென்ற போலீசார் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 1000 லிட்டர் ஊறல் மற்றும் சாராய அடுப்பு ஆகியவற்றை அழித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!