வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டை 

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டை 
X

சாராயம் காய்ச்ச பயன்பட்ட அடுப்பை அழித்த காவல்துறையினர்

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் நடத்திய அதிரடி சாராய வேட்டையில் சாராய ஊறல்கள் மற்றும் மூலப்பொருட்கள் அழிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொரிபள்ளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி டியூப்களில் நிரப்பி கொண்டு இருசக்கர வாகனத்தில் கடத்துவதாக திருப்பத்தூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்பி தனிப்படை உதவி ஆய்வாளர்கள் கணேசன் மற்றும் பிரகாசம் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கொரிபள்ளம் மலை பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது சாராயம் காய்ச்சவதற்காக வைக்கப்பட்டிருந்த 7000 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 3 அடுப்புகள் சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் பைப்புகள், 2 டன் விறகு போன்றவற்றை கைப்பற்றி மலைப்பகுதியில் தீயிட்டு அழித்தனர். தலைமறைவாக உள்ள நடராசன் மற்றும் அன்பரசன் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்