வாணியம்பாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்

வாணியம்பாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்
X

வாணியம்பாடியில் சூதாட்டம் விளையாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்

 

வாணியம்பாடியில் சூதாட்டம் விளையாடிய 8 பேர் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இராமையன்தோப்பு பகுதியில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற நகர போலீசார் 8 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ 20 ஆயிரம் பணம் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்

அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அழிஞ்சிகுளம் அப்பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் ( வயது 46), ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த ஆசிப் ( வயது 30), முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த பர்வேஷ் கான்( வயது 35), சென்னாபேட்டை பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 55), பெரியகம்மியம்பட்டு நையஸ்( வயது 29), ஜாப்ராபாத் பகுதியைச் பாரூக் ( வயது32), பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த சாதுல்லா( வயது 42), சிக்கனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!