வாணியம்பாடியில் 17 வயது  சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

வாணியம்பாடியில் 17 வயது  சிறுமியை  கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
X

குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மாதிரி படம்.

வாணியம்பாடியில் 17 வயது  சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடைய மகளை கடத்திச் சென்றதாக நகர காவல்நிலையத்தில் பெண்ணின் தந்தை வெங்கடேசன் கடந்த 4 ஆம் தேதி புகார் மனுவைக் கொடுத்து இருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் வேலூர் பச்சையப்பாஸ் தெரு பகுதியை சேர்ந்த சேட்டு மகன் நவீன்குமார் என்பவர் கடத்திச்சென்று திருமணம் செய்ய இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண்ணை காதலிப்பதாக கூறினார் இருந்தபோதிலும் பெண்ணின் 17 வயது என்பதால் இளைஞர் நவீன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!