வாணியம்பாடி அருகே விதை பறவைகள் மூலமாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி

வாணியம்பாடி அருகே விதை பறவைகள் மூலமாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி
X

வாணியம்பாடி அருகே விதை பறவைகள் அமைப்பு மூலமாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்

வாணியம்பாடி அருகே விதை பறவைகள் அமைப்பு மூலமாக வளர்க்கப்பட்ட 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா, தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதிகளில் விதை பறவைகள் இளைஞர் மன்றம் உள்ளது. இதில் கொரோனா காலகட்டத்தில் பள்ளி விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றிட பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து விதை பந்துகள் தயாரித்தல் மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கை வளத்தைப் பாதுகாத்து வருகின்றனர். மேலும் அதனை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் நட்டு பராமரித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று 25 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் அவரிடம் வழங்கினார்கள் அதனை முன்னோட்டமாக அப்பகுதியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும் அப்பகுதிக்கு வந்த பெண்கள் பொதுமக்கள் மகாத்மா காந்தி ஊரக நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறையாக வேலை வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர், உடனடியாக இதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகாமை மகேஷ் பாபு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் அருண், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார், வட்டாட்சியர் மோகன் மற்றும் விதை பறவைகள் இளைஞர் சிவராஜ், மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!