வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது

வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது
X

பைக் திருடியவரும் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளும்

வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது சந்தேகத்தின் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு முரணாக பதிலளித்தார் அதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் தொடர் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் புதூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த வாசு மகன் ஸ்ரீதர் (வயது 23) என்பதும் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நடுவர் நீதிபதி காளிமுத்து வேல் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தின் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும்..

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு