வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல். கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளி மாநிலம் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் வாணியம்பாடி ரயில்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸார் வருவதை கண்ட கடத்தல் காரர்கள் தப்பி ஓடினர். அப்போது அருகில் இருந்த புதரில் சிறுசிறு மூட்டைகளாக கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அதிகாரிகளும் ஒப்படைத்தனர் மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!