சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை: கே.சி. வீரமணி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற அலுவலகத்தை கேசிவீரமணி திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி. வீரமணி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து தொகுதி முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தன் பணியை தொடங்கி உள்ளார் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்து அல்லது தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீண்டும் கட்சியில் சேர தலைமை தான் முடிவு செய்யும். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவதாக ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. அது முழுவதும் பொய்யான செய்தி. வேலூர் மாவட்டம் எப்போதும் இது அதிமுகவின் கோட்டையாக உள்ளது. எடப்பாடி பழனி்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் அதிமுக தலைமை என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு கட்டுப்படுவோம்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. பலமுறை இது போன்று கொலை முயற்ச்சி களை பிரச்சனைகளை அவர் சந்தித்துள்ளார். அவர் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புகள் எல்லாம் அஞ்சிட மாட்டார். அவர் கடந்து வந்த காலங்களை பாதைகளைப் பார்க்கும்பொழுது பல எதிர்ப்புகளை தாண்டிதான் அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.
பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu