கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க புதிய ஆய்வாளர் நியமனம்: டிஐஜி பாபு உத்தரவு

கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க புதிய  ஆய்வாளர் நியமனம்: டிஐஜி பாபு உத்தரவு
X

புதிதாக நியமனம் செய்யப்பட்டடுள்ள ஆய்வாளர் நாகராஜன்.

வசீம் அக்ரம் கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜன் நியமனம் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவு.

வாணியம்பாடியில் நடந்த மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளை விசாரிக்க வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜன் நியமனம் செய்யப்பட்டடுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடந்த 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜன் நியமனம் செய்தும் மற்றும் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் அனுப்பவும் நியமனம் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
ai powered agriculture