வாணியம்பாடியில் இளம் பெண் மர்ம சாவு, காதலனிடம் போலீஸ் விசாரணை

வாணியம்பாடியில் இளம் பெண் மர்ம சாவு, காதலனிடம் போலீஸ் விசாரணை
X

வாணியம்பாடி அருகே காதலன் உடன் வீட்டை விட்டு ஓடிவந்த இளம் பெண் இறந்தார். (பைல் படம்)

வாணியம்பாடி அருகே காதலன் உடன் வீட்டை விட்டு ஓடிவந்த இளம் பெண் இறந்தார். போலீசார் காதலனிடம் விசாரித்து வருகின்றனர்.

ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அடுத்த கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி இவரது மகள் தீபா (வயது 20) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாக்கியராஜ் (வயது 21) என்பவரும் கடந்த 2 ஆண்டு காலமாக காதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் தீபாவிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த காதல் ஜோடிகள், கடந்த 12 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்கள், இதுகுறித்து ஜமுனாமுத்தூர் போலீசில் அவரது உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து இருவரும் தங்கி உள்ளனர், நேற்று காலையில் பாக்கியராஜ் உணவு வாங்கி வருவதற்காக ஹோட்டலுக்குச் சென்று உள்ளார்,

அப்போது அறையில் இருந்த தீபா தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக தெரிகிறது சிறிது நேரத்தில் உணவு வாங்கி வந்த பாக்கியராஜ் அறைக்கு வந்த உடன் அவர் மீது சரிந்து விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியராஜ், உடனடியாக தீபாவை, ஆலங்காயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் சேர்க்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இறந்துபோன தீபாவின் தந்தை துரைசாமி ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போனதற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனுடன் காதலி வெளியேறிய நிலையில் விஷம் அருந்தி தற்கொலை? செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story