நகராட்சி தேர்தல்: 36 வார்டுகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வரவழைப்பு

நகராட்சி தேர்தல்:  36 வார்டுகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வரவழைப்பு
X

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு நகர்புற தேர்தலை முன்னிட்டு 36 வார்டுகளில் வாக்கு பதிவு செய்ய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. தமிழக முழுவதும் வருகின்ற19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தது. அதனை நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவளருமான ஸ்டான்லி பாபு முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் இறக்கி வைத்தனர். அப்போது நகராட்சி பொறியாளர் சங்கர், மேலாளர் ஜெய் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் செந்தில் குமார், களப்பணிஉதவியாளர் சரவணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil