சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்

பெரியபேட்டை சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் அவதி. நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி குடிநீர் விநியோகம் செய்வதற்காக கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரக்கூடிய ராட்சத பைப்புகள் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ராட்சத பைப் விரிசலை சரிசெய்வதற்காக நகராட்சி நிர்வாகம் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக சாலை நடுவே பள்ளம் தோண்டியது. அதனை சரிசெய்து பிறகும் இன்று வரை அந்த பள்ளத்தை மூடப்பட்டதால் அவ்வழியாக வரக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் விபத்து ஏற்படும் முன்பு அந்த பள்ளத்தை மூடவேண்டு என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போன்று கொடையாஞ்சியில் இருந்து வாணியம்பாடி செல்லக்கூடிய பிரதான சாலையின் நடுவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் கொண்டு செல்லும் பைப் உடைந்து அதனை சீர் செய்யும் போது பள்ளங்களை தோண்டி முறையாக மூடாததால் தோண்டப்பட்ட பள்ளங்கள் குண்டும் குழியுமாக உள்ளது

இந்த சாலை வழியாக அம்பலூர், இராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, எக்லாஸ்புரம், உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் இருந்து நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டு செல்லக் கூடிய நிலை உள்ளன.

எனவே நகராட்சி நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி பள்ளங்களை மூடி சீர்செய்து சாலையை மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!