வாணியம்பாடி அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ

வாணியம்பாடி அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ
X

நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ செந்தில்குமார்

நிம்மியம்பட்டு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை எம்எல்ஏ செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிம்மியம்பட்டு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 700 மாணவர்கள் படிக்கின்றனர், பள்ளியில் உள்ள கட்டிடங்கள் பெரும்பான்மையானவை மிகவும் பழுதடைந்து, கணினி மையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கட்டிடத்திற்குள் இறங்குவதால் மாணவர்கள் பள்ளியில் வந்து படிக்க முடியாத நிலை உள்ளது.

இந்தப் பள்ளியின் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி அங்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரியும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மிகவும் பாதிப்பு உள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன.

தகவலறிந்து வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பழுதடைந்த கட்டிடங்கள் அனைத்தையும் பார்வையிட்டார், தொடர்ந்து பள்ளிக்கு தேவையான புதிய கட்டிடங்களை கட்டித் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து தருவதாகவும், சுற்றுச் சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் அங்கு பணியில் இருந்த பொறுப்பு தலைமையாசிரியர் ஜெயக்குமாரி மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பள்ளி கட்டிட குழு தலைவர் ஜம்பு வன்னியன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருப்பதி, என். பி.செல்வம், சௌந்தர் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி,குமார், ராமசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்