நாட்றம்பள்ளி ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்

நாட்றம்பள்ளி ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்
X

நாட்றம்பள்ளி ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்

நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, மல்லகுண்டா உள்ளிட்ட 17 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தன்னுயிர் பாராமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றிய 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார்.

அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்ட அவர் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, தொகுதி மக்களுக்காக அரசின் திட்டங்களை போராடி பெற்றுத் தருவேன் எனவும், மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்திடுவேன் என உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியின்போது திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஏ.ஆர். ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமார், சிவானந்தம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!