வாணியம்பாடி அருகே பாலாறு இணைப்பு பாலத்தில் மின்விளக்கு அமைப்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி அருகே பாலாறு இணைப்பு பாலத்தில் மின்விளக்கு அமைப்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு
X

வாணியம்பாடி அருகே பாலாறு இணைப்பு பாலத்தில் மின்விளக்கு அமைப்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி பெரியபேட்டை-தேவஸ்தானம் இணைப்பு பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் செந்தில்குமார் எம்எல்ஏ ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை-தேவஸ்தானம் இடையே பாலாறு ஓடுகிறது. இப்பகுதியில் பாலம் அமைக்க கோரி நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது பாலம் கட்டப்பட்டது. அதன்பின்னர் பாலத்தின் வழியாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் எம்எல்ஏ கோரியதன் பேரில் பாலத்தில் மின்விளக்குள் அமைத்து தருவதாக உறுதியளித்து இருந்தார்.

இது குறித்து 18 ஜூன் அன்று நமது இன்ஸ்டாநியூஸ் தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் செந்தில் மற்றும் அதிகாரிகளுடன் பாலத்தின் மீது மின்விளக்குள் அமைத்து குறித்து எம்எல்ஏ செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். முன்னதாக வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். தாமதமின்றி பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!