வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆய்வு

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆய்வு
X

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆய்வு மேற்கொண்டார்

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் நடைபெறும் பணிகள் குறித்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை நுண் உர செயலாக்க மையத்துடன் கூடிய குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காலத்தில் பணிகள் சரிவர செய்யாத காரணத்தால். குப்பை கிடங்கில் குப்பைகள் மலைபோல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை மற்றும் பிளாஸ்டி பொருட்களை உட்கொண்டு வந்தன.

மேலும் நுண் உர செயலாக்க மையம் மூலம் கிடைக்கக்கூடிய உரங்களும் விவசாயிகளுக்கு சரியாக கிடைக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கக்கூடிய குப்பை கிடங்கில் குப்பைகள் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து, இன்று குப்பை கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிகள் நடைபெறாமல் இருந்ததைப் பார்த்த சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளர்கள் என அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!