வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்  எம்எல்ஏ ஆய்வு
X

மருத்துவமனையில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை  ஆய்வு செய்த எம்எல்ஏ தேவராஜ்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை எம்எல்ஏ தேவராஜ் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை சுற்றி மழை நீரும் கழிவு நீரும் கலந்து தேங்கி உள்ளது. இதனால் பிரேத பரிசோதனை அறைக்கு செல்லக்கூடிய வழி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தேங்கி குளம் போல் தேங்கி உள்ளதால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர் மழையால் பழமையான மருத்துவமனை கட்டிடங்கள் அங்கங்கே விரிசல் ஏற்பட்டு மழைநீர் கட்டிடத்துக்குள் வருவதால், நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, அதனை பார்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் வாணியம்பாடி உழவர் சந்தையில் தொடர் மழை காரணமாக திடீரென சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த ஆம்பூர் அடுத்த கில்முருங்கை பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த குமார் ஆகிய இருவரையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டார்

அதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியையும், மருத்துவமனை வளாகத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு மண் கொட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டார், ஆய்வு செய்தார்..

இந்த ஆய்வின்போது வாணியம்பாடி அரசு மருத்துவ அலுவலர் அம்பிகா, மருத்துவர் செந்தில் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Tags

Next Story