மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக உதவித்தொகை ஏற்பாடு செய்த எம்எல்ஏ தேவராஜ்

மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக உதவித்தொகை ஏற்பாடு செய்த எம்எல்ஏ தேவராஜ்
X

மாற்றுத்திறனாளிக்கு உதவிதொகை ஆணையை வீடுதேடி சென்று வழங்கிய எம்எல்ஏ தேவராஜ்

வாணியம்பாடி அருகே மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிக்கு உதவிதொகை ஆணையை வீடுதேடி சென்று வழங்கிய ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி லட்சுமி இவர்களின் மகன் சதீஷ் (வயது 19) மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி, இவர் இரு வாரங்களுக்கு முன்பு திருப்பத்தூர் எம்எல்ஏ தேவராஜை தனது தாயுடன் வந்து நேரில் சந்தித்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற்றுத் தருமாறு கோரிக்கை வைத்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்எல்ஏ உடனடியாக உதவித்தொகை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து சின்ன வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று எம்எல்ஏ தேவராஜ் மாற்றுத்திறனாளிக்கான உதவிதொகை ஆணையை வழங்கினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்கவில்லை என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை வழங்க வழிவகை செய்த எம்எல்ஏவுக்கு மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!