காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
X

வைணு பாப்பு அப்சர்வேட்டரியை பார்வையிட்ட அமைச்சர்கள் பன்னீர்செல்வம் மற்றும் நேரு

வாணியம்பாடி அருகே காவலூரில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலூர் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அப்பகுதிக்கு சென்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு ஆகியோர் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்..

அதனைத்தொடர்ந்து. ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையமாக உள்ள காவலூர் வைணு பாப்பு அப்சர்வேட்டரிக்கு சென்று பார்வையிட்டு ஆராய்ச்சி மையத்தில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் (திருப்பத்தூர்) ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ், ஆலங்காயம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முனி வேல், வாணியம்பாடி நகர செயலாளர் சாரதிகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story