வாணியம்பாடியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, கதிர் ஆனந்த் , மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி , வில்வநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா, சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணி, புற்று மகாரிஷி சித்த மருத்துவமனை மருத்துவர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியம் பேசுகையில், என்னுடைய 75 ஆண்டு காலகட்டத்தில் சித்த மருத்துவத்தை யாரும் மேடை ஏற்றி அழகு பார்க்கவில்லை. முதல்முறையாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தான் இந்த நிகழ்வு நடந்தது இருக்கிறது. இதனால் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் இதே நேரத்தில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன் என்றும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் சித்த மருத்துவத்தை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு இடத்திலும் செய்தால் கொரோனா இருப்பதையே மறந்துவிடுவார்கள் எனே பாராட்டி பேசினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu