வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நில நடுக்கம்

வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்  லேசான நில நடுக்கம்
X

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை காட்டும் வரைபடம்

வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிற்காலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிற்காலை 4.17 மணிக்கு பொதுமக்கள் தூங்கி கொண்டு இருந்த போது லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் ஆம்பூரில் இருந்து தென்மேற்கு 13 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டு ரிக்டர் அளவு கோளில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இப்பகுதிகளில் ஏற்படவில்லை. ஒரு சிலர் இந்த நிலா அதிர்வுகளை உணர்ந்து உள்ளனர்.

இது குறித்து வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் சுஹேல் அஹமத் கூறுகையில் விடிற்காலை எழுந்து பாத்ரூம் சென்று மீண்டும் படுக்க சென்ற போது சத்தத்துடன் லேசான அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறினார். இது நில நடுக்கம் என்பது தெரியதாதால் மீண்டும் தூங்கி சென்றதாக கூறினார்.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் இல்லத்தரசி நதியா கூறுகையில் விடியற்காலை எழுந்தபோது பூமி அதிர்வது போல் உணர்ந்து உள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அமைதியாக சுழல் இருந்ததால் மீண்டும் வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டதாக கூறினார். காலையில் தான் உணரப்பட்ட பூமி அதிர்வு அது நில நடுக்கம் என்பது தெரிய வந்ததாக கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil