மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்: ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்:  ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு
X

சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்யும் மாவட்ட மருத்துவ அலுவலர் பசுபதி

வாணியம்பாடி அருகே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பொது மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது

அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தலின்படி துணை இயக்குனர் செந்தில். சுகாதாரப்பணிகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் கிராமத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடர்ந்து, மக்களை தேடி மருத்துவம் கொரோனா தடுப்பூசி பணி மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்