திருப்பத்தூர் ஆலங்காயத்தில் தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் ஆலங்காயத்தில் தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் தாய்சேய் மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பத்தூர் ஆலங்காயத்தில் தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், இன்று தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் நமது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி, கலந்துகொண்டு, முகாமை துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோய் அறிகுறிகள், கர்ப்ப காலத்தில் உண்ணும் சத்தான உணவு முறைகள் பற்றி எளிமையான முறையில் எடுத்துரைத்தார்.

முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு உயரம், எடை மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் மருத்துவர்கள் புவனேஸ்வரி, கார்த்திகா, மதுபாலன், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai marketing future