வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு
X

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி சேதமடைந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி சேதமடைந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உமர் நகர் மசூதி தெருவில் வசித்து வருபவர் இக்பால் அஹமத்.இவர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் உள்ளார். நேற்று இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கார் கண்ணாடி மற்றும் வீட்டின் கதவுகள் உடைந்து உள்ளது.

சம்பவம் குறித்து இக்பால் அஹமத் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கஞ்சா விற்பனை கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture