வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

பாலாற்றில் மூழ்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி

வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலாற்றில் குளிக்க சென்ற உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 55 ஆன இவர் தேங்காய் லோடு ஏற்றும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பாலாற்றில் குளிப்பதற்காக மேட்டுப்பாளையம் பெரிய பாலாற்றிற்கு சென்று அங்கு குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி நீரில் மூழ்கினார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர். தகவல் அறிந்த கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
future of ai in retail