வாணியம்பாடி : தோல் தொழிற்சாலையில் தொடர்ந்து தோல்  திருடியவர்  கைது

வாணியம்பாடி : தோல் தொழிற்சாலையில் தொடர்ந்து தோல்  திருடியவர்  கைது
X

வாணியம்பாடி தோல் தொழில்சாலையில் தொடர்திருட்டில் ஈடுபட்டதால் போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஆசைத்தம்பி. 

சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, வாணியம்பாடி நகர காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர்

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் தோல் திருடிய நபரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ 2 லட்சம் மதிப்பிலான தோல்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆட்டு தோல் தொழிற்சாலையில் இருந்து, இரவு நேரங்களில் திருடு போவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இஸ்மாயில் தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் பார்த்த போது, இளைஞர் ஒருவர் தொழிற்சாலைக்குள் நுழைந்து, தோல்களை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், வாணியம்பாடி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்ற இளைஞர், தோல் தொழிற் சாலையில் திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீஸார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 லட்சம் மதிப்பிலான தோல்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா