வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பரமேஸ்வரன் (வயது 40) இவர் ஓசூர் பகுதியில் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பிரசவத்திற்காக ஆந்திர மாநிலம் குப்பம் மருத்துவமனைக்கு சென்றுள்ளதால் இன்று விடியற்காலை ஓசூரில் இருந்து தனது சொந்த ஊரான நெக்குந்தி பகுதிக்கு மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்த அவர், தனது கூரை வீட்டில் இருந்த லைட்டை போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக அவரது சகோதரர் சிவகுமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்
அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் உடலை கைப்பற்றிய வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூரில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிய கட்டிட மேஸ்திரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நெக்குந்தி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu