வாணியம்பாடி அருகே உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

கோவில் பூட்டு உடைத்து உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவு உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்த போது சத்தம் கேட்ட ஊர் பொதுமக்கள் அங்கு சென்றுள்ளனர்.
பொதுமக்கள் வருவதை கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை ஊர் பொதுமக்கள் துரத்தி பிடித்த பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மற்றொருவர் திருடிய உண்டியலுடன் தப்பியோடினார்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற கிராமிய போலீசார் ஊர் மக்கள் பிடித்து வைத்திருந்த பிரசாந்த் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் உண்டியலுடன் தப்பியோடிய மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாலு என்பவரை கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சேர்ந்து கோவில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் குற்றவியல் நடுவர் நீதிபதி காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu