சசிகலாவுடன் பேசுபவர்கள் திமுகவில் இணைவது சூழ்ச்சி - கே.சி.வீரமணி

சசிகலாவுடன் பேசுபவர்கள் திமுகவில் இணைவது சூழ்ச்சி - கே.சி.வீரமணி
X

திமுகவை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

சசிகலாவுடன் போனில் பேசுபவர்கள் எல்லாம் திமுகவில் இணைவது சூழ்ச்சி என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகம் முன்பாக தேர்தல் நேரத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றாததை கண்டித்து, முன்னாள் அமைச்சருமான கே சி வீரமணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வீரமணி, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 300க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. வாக்குறுதிகளை நிறவேற்றாத திமுக அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் அதனை சந்திக்கக்கூடிய ஆயத்த பணிகளை அதிமுக மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அரசின் போது தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு ஒருதலைபட்சமாக அதனை தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றத்தின் போது இதுபோன்ற செயல்பாடுகள் நடக்கவில்லை.

நீட் தேர்வு என்பது மத்திய அரசின் அதிகாரத்தில் இருப்பது, மாணவர்களின் கல்வி கடன் தேசிய வங்கிகளில் பெற்றிருப்பது அதை மாநில அரசு ரத்து செய்வதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை எனக் கூறிய அவர் தேர்தல் நேரத்தில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை திமுக திணிக்கப்பட்டு வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலா மற்றும் டிடிவி தினகரனோடு பேசுபவர்கள் எல்லாம் அமமுகவினர் மட்டுமே எனவும் , அவர்களிடம் பேசுபவர்கள் எல்லாம் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைகின்றனர். ஆகையால் இதில் ஏதோ சூழ்ச்சி சதி திட்டம் நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே தயார் செய்து தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கின்றனர்.

ஆகையால், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக அரசு 50 வது ஆண்டு பொன்விழாவை கொண்டாட இருக்கின்றது. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தின் போது, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார், நகர கழக செயலாளர் சதாசிவம், பேரூராட்சி கழக செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil