வாணியம்பாடியில் பாஜக மாவட்ட அலுவலகம்: ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்

வாணியம்பாடியில் பாஜக மாவட்ட அலுவலகம்: ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்
X

வாணியம்பாடி பாஜக அலுவலக திறப்பு விழா

வாணியம்பாடியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தை காணொளி மூலமாக கட்சியின் தேசிய தலைவர் ஜே. பி.நட்டா திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் புதியதாக கட்டி உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திருப்பூரில் இருந்து காணொளி காட்சி மூலமாக கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் மாநில செயலாளர் கார்த்தியாயினி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் கல்வெட்டு திறந்து வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!