இடைநிலை சுகாதார பணியாளர் பணிகளை இணை இயக்குநர் ஆய்வு

இடைநிலை சுகாதார பணியாளர் பணிகளை இணை இயக்குநர் ஆய்வு
X

ஜாப்ராபாத் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் துணை இயக்குனர்

வாணியம்பாடியில் புதிதாக பணியமர்த்தப்பட்ட இடைநிலை சுகாதார பணியாளர் பணிகளை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தொற்றாநோய் கண்டறியும் இடைநிலை சுகாதார பணியாளரின் (MLHP) பணிகளை இணை இயக்குநர் மருத்துவர் சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது திருப்பத்தூர் துணை இயக்குனர் சுகாதார பணிகள் செந்தில் மற்றும் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

இளம் வயதினருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றாநோய்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என கேட்டறிந்தார். சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்

Tags

Next Story
ai marketing future