குடிபோதையில் மனைவியை தாக்கி, வீட்டுக்கு தீ வைத்த கணவன்

குடிபோதையில் மனைவியை தாக்கி,  வீட்டுக்கு தீ வைத்த கணவன்
X

தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர்

வாணியம்பாடியில் குடிபோதையில் மனைவியின் மண்டையை உடைத்து  வீட்டுக்கு தீ வைத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சங்கர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

சங்கர் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட சங்கர் உருட்டுக்கட்டையால் மனைவியின் மண்டையை உடைத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விஜயலட்சுமி மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னரும் குடிபோதையில் இருந்த சங்கர், அப்பகுதி மக்களிடையே தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் வீட்டில் உள்ள பொருட்களை தீவைத்து எரித்துள்ளார். இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தால் பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் பேரில் விரைந்து சென்ற வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சங்கர் வீட்டிற்கு அருகில் தனியார் கியாஸ் கிடங்கு இருப்பதால், இதுபோல மீண்டும் தீவைத்தால் ஏற்படப்போகும் விளைவுகளை நினைத்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குடிபோதையில் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பியோடிய சங்கரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!