வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டல்

வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டல்
X

வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டல்

வாணியம்பாடி அருகே மது போதையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் பேரூராட்சி செயலாளர் பாண்டியன் இவரது மகன் பாரதி (வயது 24)

இன்று மது போதையில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்குக்கு பட்டாக்கத்தி உடன் சென்று ரூபாய் 500 கேட்டு மிரட்டியுள்ளார் இந்தநிலையில் ஊழியர்கள் பணத்தை தராததால் ஆத்திரமடைந்த பாரதி அங்கிருந்த லேப்டாப் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்

பின்னர் ஊழியர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார் பின்னர் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள், அவர் சென்றவுடன் மீண்டும் பெட்ரோல் பங்க் வந்துள்ளனர். அதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் மேனேஜர் நவீன் குமார் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்,

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை தேடி வருகின்றனர். ஆலங்காயத்தில் பட்டா கத்தியுடன் பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா