வாணியம்பாடியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல்

வாணியம்பாடியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு  நேர்காணல்
X

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி தலைமையில் வார்டு உறுப்பினர் போட்டிக்கு விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது

வாணியம்பாடியில் திமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் மண்டபத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் நகராட்சி 36 வார்டுகளிலும், உத்யேந்திரம் பேரூராட்சி 15 வார்டு வார்டுகளில் மன்ற உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளித்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி தலைமையில் வார்டு உறுப்பினர் போட்டிக்கு விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

முன்னதாக ஆலங்காயம் திமுக கட்சி அலுவலகத்தில் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

இதில் ஆலங்க்காயம் பேரூராட்சி செயலாளர் ஶ்ரீதர், வாணியம்பாடி நகர பொறுப்பாளர் வி.எஸ்.சாரதி குமார், அவைத்தலைவர் ஹபீப் தங்கல், தென்னரசு, உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் ஏ.செல்வராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products