வாணியம்பாடி அருகே பேரூராட்சி மறைமுக தேர்தல் ரத்து -போலீஸ் தடியடி

வாணியம்பாடி அருகே பேரூராட்சி மறைமுக தேர்தல் ரத்து -போலீஸ் தடியடி
X
உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம்.
வாணியம்பாடி அருகே பேரூராட்சி மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.மோதலை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க .6 இடங்களிலும், சுயேட்சை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. சார்பில் 8 வது வார்டில் வெற்றி பெற்ற பூசா ராணியை தலைவர் பதவிக்கு போட்டியிட தி.மு.கழகம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்காக மறைமுக தேர்தல் நடக்க இருந்த நிலையில் பேரூராட்சி தலைவராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த பூசாராணியை எதிர்த்து 3 வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில் இணைந்த மகேஸ்வரி பேரூராட்சி தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.


இதனை கண்டித்து தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வாக்குச் சீட்டை கிழித்தும், கண்காணிப்பு கேமராவை உடைத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.


இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக பேரூராட்சி செயல் அலுவலர் குருசாமி மறுதேதி அறிவிக்கப்படும் வரை தேர்தலை தள்ளி வைக்க அறிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil