வாணியம்பாடியில் மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்கம்

வாணியம்பாடியில் மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்கம்
X
வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.

வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம் துவக்க விழா பெரியப்பேட்டை நகராட்சி இந்து நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹபீபூர் ரஹமான் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் ராஜா ஹுசைன், சையத் ரிஸ்வான், மஹபூப் பாஷா, எச்.எம்.லுத்புல்லா பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாட்டு நலப்பணி உதவி திட்ட அலுவலர் சர்வத்துல்லாஹ் அனைவரையும் வரவேற்றார். திட்ட அலுவலர் ஜா.விமல் திட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வாணியம்பாடி முஸ்லிம் கல்வி கழக உறுப்பினர் கனி முஹம்மது அஸ்ஹர், பள்ளி தாளாளர் சாஜித் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

ஏழு நாட்கள் நடக்க இருக்கும் இந்த சிறப்பு முகாமில் வீதிகள், பள்ளி வளாகங்கள் தூய்மைப்பணி, மரக்கன்று நடுதல், மாணவர்களின் தனித்திறன் , தலைமைப் பண்பு மேம்பாடு, யோகா பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளப்படும். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட அலுவலர் சாதிக் பாஷா நன்றி கூறினார்.

ஆம்பூரில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அரங்கல்துருகம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கே.ஆசிப் இக்பால் அஹமத் தலைமை வகித்தாா். அரசு பள்ளித் தலைமை ஆசிரியா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.அஜ்மத்துல்லா வரவேற்றாா். அரங்கல்துருகம் ஊராட்சி மன்ற தலைவா் பானுமதி ஜெயராஜ் முகாமை தொடங்கி வைத்தாா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மோகன், மூா்த்தி, ஊராட்சி செயலாளா் சிவக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!