/* */

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் மற்றும் சாராய ஊறல் அழிப்பு.

வாணியம்பாடி அருகே 400 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே  கள்ளச்சாராயம் மற்றும்  சாராய ஊறல் அழிப்பு.
X

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் மற்றும் சாராய ஊறல் அழிப்பு.

தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாகி வருகின்றன

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் அதிகளவில் விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் வெளி மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து தமிழகத்தில் விற்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான கோரிப்பள்ளம் பகுதிகளில் வாணியம்பாடி டி.எஸ்.பி பழனிசெல்வம், மற்றும் ட்ரெய்னிங் டிஎஸ்பி கபிலன் ஆகியோர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு கோரிப்பள்ளம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 5 பேர் போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அங்கு ஆய்வு செய்தபோது 10000 லிட்டர் சாராயம் ஊறல் மற்றும் 500 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராயம் ஆகியவற்றை போலீசார் சம்பவ இடத்திலேய அழித்தனர்

மேலும் கோரிப்பள்ளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் அதே பகுதியை சேர்ந்த பெருமாள், பொன்னுசாமி, சின்னத்தம்பி ஆகியோர் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

வாணியம்பாடி பகுதியில் மது அமலாக்கப் பிரிவு போலீசார் இருந்தும் கள்ளச்சாராயம் விற்பனை அதிகளவில் உள்ளது. . இந்தநிலையில் வாணியம்பாடி டி.எஸ்.பி பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் இன்று சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் மட்டுமே இந்த கள்ளச்சாராயத்தை பிடிபட்டதாக கூறப்படுகிறது.

Updated On: 30 May 2021 2:43 PM GMT

Related News