துய்மையான மாவட்டம்; திருப்பத்தூர் ஆட்சியர் தீவிரம்

துய்மையான மாவட்டம்; திருப்பத்தூர் ஆட்சியர் தீவிரம்
X

ஜாபராபாத் பகுதி பாலாற்று கால்வாய்களில் சீரமைப்பு பணிகளை பார்வையிடும் ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டத்தை சுகாதாரமாக மாற்றிட மாவட்ட ஆட்சியர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரமாக மாற்றிட மாவட்ட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணிகளை அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி அதிகாரிகளிடம் தூய்மைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், நாளொன்றுக்கு 10 வது வார்டு அல்லது 5 வது வார்டு பகுதிகளில் முழுமையாக தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கிராமப்புற பகுதிகளில் சுகாதார பணியில் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் கிராமப் பகுதியில் உள்ள நகர பகுதிகளிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக ஆட்சியர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, ஜாபராபாத் பகுதி பாலாற்றில் கட்டியுள்ள தடுப்பணையிலிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாய்களில் சீரமைப்பு மற்றும் வெள்ள நீர் செல்லும் கால்வாய்களை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு மேலும் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil