வாணியம்பாடி சுங்கச்சாவடியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு

வாணியம்பாடி சுங்கச்சாவடியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  ஆய்வு
X

வாணியம்பாடி சுங்கச்சாவடியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு மேற்கொண்ட  சுகாதாரத்துறை செயலாளர் 

வாணியம்பாடி சுங்கச்சாவடியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்த சுகாதார செயலர், வாணியம்பாடி அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு லாரி ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவரே நேரில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்,

அப்போது சுகாதாரத்துறை இயக்குனர் டிவிஎஸ் செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். பசுபதி மற்றும் அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் தடுப்பு பணிகளை விரைந்து செய்யுமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிருஷ்ணகிரி புறப்பட்டுச் சென்றார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது