வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள்பறிமுதல்.

வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள்பறிமுதல்.
X

கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர் ரமேஷ்

வாணியம்பாடியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்டுள்ள புகையிலைபொருட்கள் பறிமுதல். கடை உரிமையாளர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கணியம்பாடி தெருவில் உள்ள மாருதி மார்கெட்டிங் என்ற கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் நிலையத்திற்கு கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் நகர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த கடையின் அருகே மறைவான இடத்தில் விற்பனை செய்வதற்காக 3 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த கடையின் உரிமையாளர் ரமேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!