வாணியம்பாடி அருகே பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

வாணியம்பாடி அருகே பொருட்கள் பறிமுதல்:  ஒருவர் கைது
X

வாணியம்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

வாணியம்பாடி அருகே மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் அம்பலுர் போலீஸார் புத்து கோயில் பாம்பான்டி வட்டம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ரவி என்பவருக்கு சொந்தமான மாட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் 35 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ரவி என்பவரின் மகன் தென்னரசு என்பவர் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பூவரசன் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் குட்கா கொள்முதல் செய்த 10 கடை உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!